Samsung Galaxy J7 தொடர்பான தகவல்கள் வெளியாகின

Samsung நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Galaxy J7 இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் தற்போது அக் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 650 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புகளை ஏற்படுத்துவதற்கான கமெரா, பிங்கர் பிரிண்ட் ஸ்கானர் என்பனவும் தரப்பட்டுள்ளன.
எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About ar

A news portal based in Puttalam City of Sri Lanka that brings you "Smarter. Faster. More colorful" . News that's meant to be shared.
    Blogger Comment
    Facebook Comment

1 comments: