தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் மில்காந்தன் என்பவருக்கு எதிரான பிடிவிராந்து உத்தரவும், சிகப்பு எச்சரிக்கையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு விசேட உயர் நீதிமன்றம் எமில் காந்தனுக்கு எதிரான பிடிவிராந்து உத்தரவினை இன்றைய தினம் நீக்கியுள்ளது.
கொழும்பு விசேட உயர் நீதிமன்றம் எமில் காந்தனுக்கு எதிரான பிடிவிராந்து உத்தரவினை இன்றைய தினம் நீக்கியுள்ளது.
தமது கட்சிக்காரர் காவல்நிலையத்தில் ஆஜராகுவார் என எமில்காந்தன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பிடிவிராந்து உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்புடன் எமில்காந்தன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகவும் புலிகளுக்கும் மஹிந்தவிற்கும் இடையிலான நிதிக் கொடுக்கல் வாங்களை எமில்காந்தன் மேற்கொண்டதாகவும் தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இரகசிய இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடக்கு மக்கள் வாக்களிப்பினை நிராகரிப்பதற்கு புலிகளுக்கு மஹிந்த எமில்காந்தன் ஊடாக பணம் வழங்கினார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது
0 comments:
Post a Comment