ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் இலங்கை விஜயத்தில் உள்நோக்கம் உண்டு என கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினரும் ஜே.என்.பி.யின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தும் நீதிமன்றமொன்றை அமைக்கும் நோக்கில் அல் ஹூசெய்ன் இலங்கை விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்ட முன்னாள் ஜனாதிபதி மற்றும் படையினரை தண்டிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அல் ஹூசெய்ன் இலங்கையில் யுத்தக் குற்றச் செயல் நீதிமன்றமொன்றை அமைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாட்டை சர்வதேச சமூகத்திடம் காட்டிக் கொடுக்க முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் பயணத்தை தடுத்து நிறுத்த பல்வேறு வழிகளில் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யோசித கைது செய்யப்பட்டமை சிராந்தி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை போன்ற மஹிந்தவின் அரசியல் பயணத்தை முடக்கும் முயற்சிகளாகும் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment