நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இலங்கைக் கிரிக்கட் அணியின் தலைவர் அன்ஜலோ மெத்யூஸை அழைத்து விசாரணை செய்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் வீடுகளுக்குச் செல்லும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு, ஏன் தேசிய கிரிக்கட் அணியின் தலைவரை அழைத்து விசாரணை செய்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரிகள் மெத்யூஸின் இல்லத்திற்கு சென்று ஏன் வாக்கு மூலம் பதிவு செய்திருக்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Home / Sports /
SriLanka News
/ நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகள் குறித்து அர்ஜூன அதிருப்தி
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment