உலக சுகாதார நிறுவனம் இன்று சீகா வைரஸ் தாக்கத்தை முழு உலகிற்குமான சுகாதார அவசரநிலையாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
WHO என அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளவையின் அங்கமான உலக சுகாதார நிறுவனம் தோற்றம் பெற்றதிலிருந்து இன்று விடுத்துள்ளதுடன் சேர்த்து நான்கு அவசர அழைப்புக்களையே விடுத்துள்ளது.
லத்தீன் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் நான்கு மில்லியன் மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டதும், 25 நாடுகளிற்கு மேல் அது பரவியுள்ளதுமே இதற்கான காரணமாக இருந்த போதிலும், உலக ரீதியாக விடுக்கப்பட்ட இந்த அழைப்பு நுளம்பினால் பரப்பப்படும் இந்த நோய் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து விரைவாகப் பரவுவதை எடுத்துக் காட்டுகின்றது.
இதேவேளை, கர்ப்பினிப் பெண்களை இந்த வைரஸ் தாக்கும் போது அவர்களிற்குப் பிறக்கும் குழந்தைகள் தலை சிறியதாகவும், நரம்பு மண்டப் பாதிப்பை குறிப்பாக மனநோய்ப் பாதிப்புக்கும் உள்ளாகின்றார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment